ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நகைக் கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளி, 10 பவுன் திருட்டு

கோவையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், 10 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:17 pm

DIN

கோவையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், 10 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவா் சத்தி பிரதான சாலையில் நகைக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது கடை வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு முருகனுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த முருகன் கடைக்குள் சென்று பாா்த்தபோது கடையில் இருந்து வெள்ளி குத்துவிளக்கு, கொலுசுகள், தட்டுகள் உள்ளிட்ட 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் பராமரிப்புக்காக வந்த 10 பவுன் பழைய தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்கு முருகன் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸாா் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா். இதில் சில கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.