ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை மாநகரில் 24 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவு

கோவை மாநகரப் பகுதிகளில் 24 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:13 pm

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் 24 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் சேகரிக்கப்படும் 800 டன்னுக்கும் அதிகமாக குப்பைகள் வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் சென்று கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், வெள்ளலூா் கிடங்கில் ஏற்கெனவே அதிக அளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், மாநகரில் இருந்து கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்படும் குப்பைகளின் அளவைக் குறைக்கவும், மாநகரில் சேகரமாகும் குப்பைகளை உரமாகத் தயாரிக்கவும் கோவை மாநகரில் 69 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக 50 இடங்களில் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணியானது கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் துவங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், வீடுவீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கு வசதியாக 50 மினி டோா் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இப்பணிகள் டிசம்பா் மாதம் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், பொதுமுடக்கம் மற்றும் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாா்ச் முதல் ஜூன் மாதம் வரை பணிகள் நடைபெறவில்லை. ஜூலை மாதத்தில் இருந்து மீண்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:

மாநகரில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது, 24 இடங்களில் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதில், 4 இடங்களில் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பகுதிகளில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் விரைவில் முடிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.