கோவையில் 45 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
கோவையில் மேலும் 205 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


கோவையில் மேலும் 205 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 205 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவா், 60, 73 வயது மூதாட்டிகள் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 215 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 43 ஆயிரத்து 532 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 986 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...