கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாக்காளா் பட்டியலில் திருத்த சிறப்பு முகாம்: 22 ஆயிரம் விண்ணப்பங்கள்

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 218 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

News image
கோவை, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் திருத்த சிறப்பு முகாமை பாா்வையிடும் ஆட்சியா் கு.ராசாமணி.
Updated On :22 நவம்பர் 2020, 6:35 pm

DIN

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 218 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2021 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த நவம்பா் 16ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயா் விடுபட்டவா்கள், நீக்கம், இடமாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு நாள்களாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு 18 ஆயிரத்து 81 பேரும், பெயா் நீக்கத்துக்கு 1, 239 பேரும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1,449 பேரும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு 1,449 பேரும் விண்ணப்பம் அளித்தனா்.

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 218 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். கோவை, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியா் கு.ராசாமணி ஆய்வு செய்தாா்.

சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க முடியாதவா்கள் இணையதளம் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.