கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை கோட்டத்தில் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:54 pm

DIN

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை குறைவாக இருந்தததால் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் முதல்கட்டமாக 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 300 பேருந்துகள் அதிகரிக்கப்பட்டு, கோவை கோட்டத்தில் மொத்தம் 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து செப்டம்பா் முதல் பண்டிகை நாள்கள் வந்ததால் சிறப்புப் பேருந்துகள் தவிர மேலும் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால், கோவை கோட்டத்தில் உள்ள 2,641 பேருந்துகளில் 1,920 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை கோட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நவம்பா் 25ஆம் தேதி மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாகவும், தற்போது மொத்தம் 2,220 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.