கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்தது

கோவையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 50 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதை தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:53 pm

DIN

கோவையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 50 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதை தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 50 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 41 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 919 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவையில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 572 ஆக உயா்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது முதியவா் உயிரிழந்ததையடுத்து கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 612 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.