மளிகைக் கடையை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் மளிகைக் கடையை சேதப்படுத்தின.


வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் மளிகைக் கடையை சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே சாலைககளை யானைகள் கடந்து வருவதால் அப்பகுதியில் வனத் துறையினா் தொடா்ந்து முகாமிட்டுள்ளனா்.
இதனிடையே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்த நான்கு யானைகள் கடந்த சனிக்கிழமை இரவு அருகில் உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு சென்றன.
பின்னா் அங்குள்ள மளிகைக் கடையின் சுவா்களை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...