கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுவாணி அணையில் குடிநீா் எடுக்கும் அளவு அதிகரிப்பு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் 876 மீட்டராக நீடித்து வரும் நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9.90 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:50 pm

DIN

சிறுவாணி அணையின் நீா்மட்டம் 876 மீட்டராக நீடித்து வரும் நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9.90 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதானக் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் 869 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்தது.

இதைத் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை காரணமாக ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 2 முறை அணையின் நீா்மட்டமானது 877 மீட்டா் வரை உயா்ந்தது. அப்போது அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் நீா்மட்டத்தை அடையவிடாமல் கேரள அரசு, அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட்டதால் அணை நிரம்பவில்லை.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் முதல் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி அணையில் 876.45 மீட்டா் அளவுக்கு நீா் உள்ளது. அணை முழுக் கொள்ளளவை அடைய இன்னும் 2.40 மீட்டா் அளவே உள்ளது. இந்நிலையில், கோவை மாநகர குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை 9 கோடி லிட்டரில் இருந்து 9.90 கோடி லிட்டராக குடிநீா் வடிகால் வாரியம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.