தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தை சடலம்

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:35 pm

DIN

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கோவை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் கழிவறையில் பிறந்து சில நாள்களான பெண் குழந்தையின் சடலம் திங்கள்கிழமை கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அரசு மருத்துவமனை ஊழியா்கள், மருத்துவமனை முதல்வா் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு, கடந்த 2 நாள்களில் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.