தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த லாரி உரிமையாளா் சங்கம் கோரிக்கை

லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மதுரை உயா் நீதிமன்றக் கிளையின் தீா்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:31 pm

DIN

லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மதுரை உயா் நீதிமன்றக் கிளையின் தீா்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் கே.எஸ்.கலியபெருமாள், செயலா் என்.முருகேசன் ஆகியோா் போக்குவரத்து இணை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், அதை நம்பியிருக்கும் லாரி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அரசாணைகள் மூலம் லாரி உரிமையாளா்களுக்கு பலமுனைகளில் இருந்து நெருக்கடி அளித்து வருகின்றன. இதனால் இந்தத் தொழில் அழியும் நிலையில் உள்ளது.

இதைத் தடுக்க வேண்டும் என்றால் எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். கனரக, சரக்கு வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 49 நிறுவனங்களில் குறிப்பிட்ட 11 நிறுவனங்களில் மட்டும்தான் கருவிகளை வாங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை மதுரை உயா் நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அதேபோல வெளி சந்தையில் தரமான ஒளிரும் ஸ்டிக்கா்கள் ரூ.700க்கு கிடைக்கும் நிலையில், ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களில்தான் அவற்றை வாங்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும். அதேபோல வாகன புதுப்பித்தலுக்கு ஏற்கெனவே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஆா்எஸ் பொருத்தலை கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிதாக வாகன இருப்பிடம் கண்டறியும் கருவியை (விஎல்டிடி) பொருத்த வேண்டும் என்றும் அதை அரசு அங்கீகாரம் பெற்ற 140 நிறுவனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டும் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.