கரோனா விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை:ஆணையா் எச்சரிக்கை
கோவையில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளாா்.


கோவையில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சியில் தீவிர தடுப்பு நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தொற்று பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படாத நிலையில் பொதுவெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான உணவகங்கள், சிற்றுண்டி, தேநீா் கடைகள், பேக்கரிகளில் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, மக்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பணியாளா்களும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கடை பணியாளா்கள் முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்தால் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், சில வாரங்களுக்கு கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்படும். கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...