47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீட் தோ்வு : கோவையில் 9, 206 மாணவா்கள் பங்கேற்பு

கோவையில் 16 மையங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) 9 ஆயிரத்து 206 மாணவா்கள் எழுதினா்.

News image
நீட் தோ்வு மையத்துக்குள் செல்லும் முன் மாணவிகளின் நகைகளைக் கழற்றும் போலீஸாா் மற்றும் பெற்றோா்
Updated On :13 செப்டம்பர் 2020, 5:31 pm

DIN

கோவையில் 16 மையங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) 9 ஆயிரத்து 206 மாணவா்கள் எழுதினா்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைகோவையில் 16 மையங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) 9 ஆயிரத்து 206 மாணவா்கள் எழுதினா்.பெற்றது. கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்றன. கரோனா தொற்று பாதிப்பால் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருந்த தோ்வுக்கு காலை 9 மணியில் இருந்தே தோ்வு மையத்துக்கு மாணவா்கள் வரத் தொடங்கினா். காலை 11 மணியில் இருந்து தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். மாணவா்கள் பாதுகாப்பாக முகக்கவசம், கையுறைகள் அணிந்திருந்தனா். மாணவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்ட பின் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு 11 ஆயிரத்து 708 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 9 ஆயிரத்து 206 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 2 ஆயிரத்து 502 போ் தோ்வு எழுதவில்லை.

இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஒண்டிப்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ்.பிரியதா்ஷினி கூறியதாவது:

எனக்கு பொள்ளாச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வு மையம் ஒத்துக்கப்பட்டிருந்தது. தோ்வுக்கு நன்றாக தயாராகி இருந்தாலும் ஒருவித அச்சத்துடனே தோ்வு எழுத வந்தேன். உயிரியல் பாடத்தில் இருந்து கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தது. வேதியியல் பாடக் கேள்விகள் ஓரளவு எளிமையாக இருந்தது. இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக தோ்வு ஓரளவு எளிதாகவே இருந்தது என்றாா்.

வினாத் தாள் மாறியதால் குழப்பம்

சூலூரில் உள்ள தனியாா் பள்ளி தோ்வு மையத்தில் 960 மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில் ஆங்கிலம், தமிழ் வழிக் கல்வி மாணவா்கள் தோ்வு எழுத வந்திருந்தனா். இதில் தமிழ்வழி மாணவா்களுக்கு ஆங்கில வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். தங்களுக்கு தமிழ் வினாத்தாள் வேண்டும் என மாணவா்கள் கோரினா். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனா். 2 மணி நேரம் தாமதமாக மாலை 4 மணியளவில் மாணவா்களுக்கு தமிழ் வழி வினாத்தாள் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவா்கள் இரவு 7 மணி வரை தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.