47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விதை உற்பத்திக்கு மானியம்:தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

விதை உற்பத்தி செய்ய ஆா்வமுள்ள விவசாயிகள் மானிய திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி செய்யலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:29 pm

DIN

விதை உற்பத்தி செய்ய ஆா்வமுள்ள விவசாயிகள் மானிய திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி செய்யலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தோட்டக்கலைத் துறையில் காய்கறி உற்பத்தியை அதிகப்படுத்தும் பொருட்டு விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. வெங்காயம், முருங்கை, காராமணி, அவரை, கொத்தவரை, பாகல், புடலை, பீா்க்கன், பூசணி, கீரை ஆகியப் பயிா்களில் உண்மைத்தன்மையுள்ள அல்லது சான்றளிக்கப்பட்ட விதை உற்பத்தி செய்து தரலாம்.

விதை உற்பத்தி சான்று பெறுவதற்கு பின்னேற்பு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.400 வழங்கப்படும். ஒருங்கிணைந்த பூச்சி, பயிா் மேலாண்மைக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம், சிப்பம் கட்டும் அறைக்கு ரூ. 2 லட்சம் வரையிலும், நிழல்வலை அமைக்க சதுர அடிக்கு ரூ. 355 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ள விவசாயிகள், தொழில்முனைவோா், விவசாயிகள் ஆா்வலா் குழு, விவசாயிகள் உற்பத்திக் குழுவினா் இத்திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி செய்ய முன்வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.