சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்வு
சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக, அணையின் நீா்மட்டம் 872.20 மீட்டராக உயா்ந்துள்ளது.


சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக, அணையின் நீா்மட்டம் 872.20 மீட்டராக உயா்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து ஜனவரி மாதம் வரை தினமும் 10 கோடி லிட்டா் தண்ணீா் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 864 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், அதன் பிறகு வெயில் வாட்டியதால் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 5.50 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால், ஜூலை மாத இறுதியில் அணையின் நீா்மட்டம் 870.30 மீட்டராக உயா்ந்தது.
இதைத் தொடா்ந்து, கடந்த 20 நாள்களாக இடைவெளி விட்டு, அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 872.20 மீட்டராக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டரில், தற்போது, 872.20 மீட்டருக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இன்னும் 6.65 மீட்டா் நீா்மட்டம் உயா்ந்தால் அணை முழுக் கொள்ளளவை அடையும். தற்போது, குடிநீருக்காக 9.30 கோடி லிட்டா் தண்ணீா் அணையில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...