இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் அங்கொட லொக்கா மாரடைப்பால் சாவு: சிபிசிஐடி

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் அங்கொட லொக்கா மாரடைப்பால் மரணமடைந்தார் என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. 
அங்கொட லொக்கா.
அங்கொட லொக்கா.
Updated on
1 min read

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் அங்கொட லொக்கா மாரடைப்பால் மரணமடைந்தார் என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. 

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் அங்கொட லொக்கா (35). இவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவர், சென்னையில் பதுங்கி இருந்தார். பின்னர் கோவையில் பிரதீப் சிங் என்ற போலி பெயரில் வீடு பிடித்து தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி அமானி தான்ஜி கூறினார். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவர் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் வக்கீல் சிவகாம சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் காதலி அமானி தான்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி இது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு அறிக்கை வந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை என்றார். மேலும் இறந்தவர் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com