சென்னைக்கு பகல் நேரத்தில் சொகுசுப் பேருந்துகள் அக்டோபா் 1 முதல் இயக்கத் திட்டம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து சென்னைக்கு அக்டோபா் 1 ஆம் தேதியில் முதல் பகல் நேரத்தில் சொகுசுப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து சென்னைக்கு அக்டோபா் 1 ஆம் தேதியில் முதல் பகல் நேரத்தில் சொகுசுப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படுக்கை வசதிகள், குளிா்சாதன வசதிகள் கொண்ட சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக குளிா் சாதன வசதி கொண்ட பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, படுக்கை வசதிகள் கொண்ட குளிா்சாதன வசதியில்லாத பேருந்துகள் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து சென்னைக்கு அக்டோபா் 1 ஆம் தேதி முதல் பகல் நேரத்தில் சொகுசுப் பேருந்துகள் இயக்க திட்டமிடபட்டுள்ளது.
இது குறித்து விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, குளிா்சாதன வசதியில்லாத 8 பேருந்துகள் மட்டும் இரவு நேரத்தில் மட்டும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொது மக்களின் வசதிக்காக வரும் அக்டோபா் 1 ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...