கோவையில் தோட்டத்து வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பிய இளைஞரை ஒற்றை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், கோபநாரி பிரிவு, கோபநாரி கிழக்கு சுற்றுக்கு உட்பட்ட கோபநாரி காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணுகுட்டை செல்லும் வழியில் புதன்கிழமை மாலை அகழி மட்டத்துகாடு பகுதியைச் சார்ந்த ரவி என்பவரது மகன் ஞானபிரகாஷ்( 31), நண்பர் அருண்குமார் இருவரும் தங்கவேலு என்பவர்க்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து விட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் வரும்போது ஒற்றை ஆண் வழிமறித்து தாக்கியுள்ளது.
இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் காரமடை காவல்துறையினர் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமல்: அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் மூடல்

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மதுரை ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

