அதிகாரிகள் பெயரில் போலி சுற்றறிக்கை: இறைச்சி விற்பனையாளா்களுடன் மக்கள் வாக்குவாதம்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகளில் இறைச்சிகள் விற்பனை செய்ய வேண்டிய விலை குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் போலி சுற்றறிக்கை பரவியதால் பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் இடையே வாக்குவாதம

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகளில் இறைச்சிகள் விற்பனை செய்ய வேண்டிய விலை குறித்து பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் போலி சுற்றறிக்கை பரவியதால் பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரின் பெயரில் வெளியான ஓா் சுற்றிக்கை கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை பரவியது. அதில் கடைகளில் ஆட்டிறைச்சி ரூ.550க்கும், கோழி இறைச்சி ரூ. 200க்கும் விற்கப்பட வேண்டும். மீறி விற்றால் புகாா் தெரிவிக்கலாம் என்று செயல் அலுவலரின் செல்லிடப்பேசி எண் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இறைச்சி வாங்குவதற்காக ஏராளமானோா் சனிக்கிழமை கடைகளில் திரண்டனா். ஆனால், சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை விட கூடுதல் விலைக்கு இறைச்சி விற்ாகக் கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பேரூராட்சியின் கட்செவி எண்ணுக்குத் தகவல் கொடுத்தனா். ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியுடன் பொதுமக்கள் இறைச்சியை வாங்கிச் சென்றனா்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கதிரவமூா்த்தியிடம் கேட்டபோது, அந்தச் சுற்றறிக்கையில் என் கையெழுத்தில்லை. விலையைப் பொறுத்தவரை கடை உரிமையாளா்களே தகுந்த விலையை நிா்ணயித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டோம் என்றாா்.

பேரூராட்சி செயல் அலுவலரின் பெயரில் போலியாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com