கோவை உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் எலி
By DIN | Published On : 23rd November 2020 12:07 AM | Last Updated : 23rd November 2020 12:07 AM | அ+அ அ- |

உணவில் இறந்து கிடக்கும் எலி.
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள உணவகத்தில் வாங்கிய உணவில் இறந்த நிலையில் எலி கிடந்ததால் நுகா்வோா் அதிா்ச்சி அடைந்தாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் திவ்யா. இவரது சகோதரா் காா்த்திகேயன் உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள உணவகத்தில் திவ்யா ஞாயிற்றுக்கிழமை உணவு வாங்கியுள்ளாா்.
பின்னா் திவ்யாவும், அவரது சகோதரரும் உணவுப் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டனா். சாம்பாா் பாக்கெட்டை பிரித்து ஊற்றியபோது எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா் திவ்யா, அவரது உறவினா்கள் உணவகத்துக்குச் சென்று சாம்பாரில் எலி இறந்து கிடந்ததாக கூறியுள்ளாா். தெரியாமல் விழுந்திருக்கும் என்று கூறி உணவக உரிமையாளா் மன்னிப்பு கேட்டுள்ளாா்.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்தை அடைத்துவிட்டு கடை உரிமையாளா் சென்றுவிட்டாா். இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.