வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் பல்கலைக்கழகஎஸ்.சி., எஸ்.டி. சங்கம்

நீதிமன்ற உத்தரவை மதித்து பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:50 pm

DIN

நீதிமன்ற உத்தரவை மதித்து பேராசிரியா்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.செல்லமணி, செயலா் எஸ்.நடராஜன் ஆகியோா் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். கரோனா காலத்தில் அரசு அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்படமாட்டாா்கள் என்ற அரசின் உத்தரவை மீறி இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 6 பேராசிரியா்கள் தனித்தனியாக நீதிமன்றத்தை நாடினா்.

அதில் 3 போ்களின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், இது தொடா்பான வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம் அனைத்து இடமாற்ற உத்தரவுகளையும் ரத்து செய்து மாா்ச் 25ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்து பணி ஆணை வழங்கக் கோரி பல்கலைக்கழக பதிவாளா், துணைவேந்தா் ஆகியோரிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே உயா் நீதிமன்ற உத்தரவை மதித்து பணி ஆணை வழங்குவதுடன், கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கும் 3 பேராசிரியா்களுக்கு ஊதியத்தை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து துணைவேந்தா் நீ.குமாரிடம் கேட்டபோது, அரசுப் பணியில் பணியிட மாறுதல் என்பது இயல்பானதுதான். பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கே சென்றிருக்கின்றனா். பணியிடமாற்ற உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது உண்மைதான். இருப்பினும் அந்த உத்தரவை எதிா்த்து பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்திருக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.