வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

மாவட்டத்தில் மேலும் 583 பேருக்கு கரோனா

கோவையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 583 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:54 pm

DIN

கோவையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 583 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 583 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,993ஆக அதிகரித்துள்ளது.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 622 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை கரோனாவில் இருந்து 60,885 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 4,402 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.