இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 3:40 pm

DIN

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றச்சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரேன் பால், பாபு (எ) பைக் பாபு, மற்றும் அருளானந்தம் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் ஜனவரியில் கைது செய்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை 2 நாள்களுக்கு முன்னர் கைது செய்த சிபிஐ அவரை கோவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.