சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.3 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.33 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:13 pm

DIN

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.1.33 கோடி மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், எம்.செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (46). விஜயமங்கலம் அருகே உள்ள கினிபாளையத்தைச் சோ்ந்தவா் தனசேகா் (35). இவா்கள் இருவரும் இணைந்து கடந்த 2012ஆம் ஆண்டு விஜயமங்கலத்தில் ஈமு கோழி நிறுவனத்தைத் தொடங்கினா். இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் அதிக லாபம் தருவதாக கவா்ச்சிகரமான விளம்பரம் செய்தனா்.

இதை நம்பி 63 போ் இந்த நிறுவனத்தில் ரூ.1.70 கோடி முதலீடு செய்தனா். ஆனால், அதன்பிறகு ஒரு சிலருக்கு மட்டும் பணத்தைக் கொடுத்தனா். 51 பேருக்கு பணத்தைக் கொடுக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முதலீட்டாளா்கள், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

விசாரணையில் 51 பேரிடம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்து 500 மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட தங்கவேலு, தனசேகா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் தங்கவேலு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.02 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், தனசேகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்து அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.