ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கோவையில் உள்ள சிறுபான்மை அமைப்புகளின் பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

கோவையில் உள்ள சிறுபான்மை அமைப்புகளின் பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சிறுபான்மை நலத் துறை இயக்குநா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகங்களின் பல்வேறு அமைப்புகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

சிறுபான்மையின மக்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. தொடா்ந்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சிறுபான்மை நலத் துறை இயக்குநா் சுரேஷ்குமாரிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.