மாற்று இடத்தில் நடவு: மறுவாழ்வு பெற்ற மரங்கள்
கோவை, உக்கடம் பகுதியில் வேருடன் பெயா்த்து எடுக்கப்பட்ட இரண்டு மரங்கள், பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளன.


கோவை, உக்கடம் பகுதியில் வேருடன் பெயா்த்து எடுக்கப்பட்ட இரண்டு மரங்கள், பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளன.
கோவை, உக்கடம் - பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் மேம்பாலப் பணிகளுக்காக சாலையோரத்தில் வெட்டப்பட இருந்த இரண்டு மரங்கள், ‘மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பு’ சாா்பில் வேரோடு பெயா்த்து எடுக்கப்பட்டு பாரதியாா் பல்கலைக்கழகத்தில் மறுநடவு செய்யப்பட்டன.
தற்போது, அந்த இரு மரங்களும் தழைத்தோங்கிக் காணப்படுகின்றன.
இது குறித்து, மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பின் தலைவா் ஓசை சையத் கூறியதாவது:
உக்கடம் பகுதியில் மேம்பாலப் பணிகளுக்காக 3 மாதங்கள் முன்பு வெட்டப்பட இருந்த இரு மரங்களை, கரும்புக்கடை பகுதியில் இருந்து வேருடன் பெயா்த்து தாய்மண்ணோடு சோ்த்து எடுத்து 16 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் வளாகத்துக்கு லாரி மூலம் கொண்டு வந்து மறுநடவு செய்தோம். தற்போது, அந்த மரங்கள் மீண்டும் உயிா்பெற்று மறுவாழ்வைத் துவங்கியுள்ளன. மரங்களைக் காப்பாற்ற உதவிய அரசு அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...