கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் உறுப்பினா்கள், ஓய்வூதியதாரா்கள், தொழிலதிபா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்களது குறைகள் குறித்த விவரங்களை வருகிற டிசம்பா் 8ஆம் தேதிக்குள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் ல்ஞ்ட்ள்.ழ்ா்ஸ்ரீக்ஷங்ஃங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களுடன், தங்களது பெயா், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.