வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பறிமுதல் வாகனங்கள் ரூ. 17.71 லட்சத்துக்கு ஏலம்

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:49 pm

DIN

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 71 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன.

இதில் ஏலத்தொகை ரூ.16 லட்சத்து 8 ஆயிரத்து 500, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 62 என மொத்தம் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 562 பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. வாகனங்கள் ஏலம் எடுத்தவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.