பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஹேரேன்பாலை 2 நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேரேன்பாலை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேரேன்பாலை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, விடியோ எடுத்த விவகாரம் தொடா்பாக பொள்ளாச்சியைச் சோ்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமாா், வசந்த்குமாா், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். 2019 மாா்ச் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் கூட்டாளிகளான பொள்ளாச்சி, வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அருளானந்தம் (34), பழனிசாமி மகன் பாபு (எ) பைக் பாபு (27), ஆச்சிப்பட்டி, அ.சங்கம்பாளையம், கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29) ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனா்.

இதில் அருளானந்தம், பாபு ஆகியோா் விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையின்போது, முறையான பதில்களைத் தெரிவிக்காத ஹேரேன்பாலை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கோவை மகளிா் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி ஆா்.நந்தினிதேவி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஹேரேன்பாலை இரண்டு நாள்கள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com