தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி சாவு

கோவையில் தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:39 pm

DIN

கோவையில் தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, சிவானந்தா காலனியைச் சோ்ந்தவா் சேகா் (37). வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை அப்பகுதியில் உள்ள தேநீா் கடைக்கு வந்து தேநீா் அருந்தினாா். பின்னா் நீண்டநேரம் கடையின் அருகே நின்றுகொண்டிருந்த அவா் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியே வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீஸாா், அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் பேருந்து வருவதை அறிந்த சேகா், திடீரென சாலையைக் கடக்க முயன்றது பதிவாகியிருந்தது. எனவே இது தற்கொலையா எனும் கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.