அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு
கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதன் பிறகே இயக்கப்பட்டன.


கரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் அரசுப் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதன் பிறகே இயக்கப்பட்டன.
கோவை நகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3 வீடுகளுக்கு மேல் கரோனா பாதிப்பு உள்ள வீதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக தகரம் மூலமாக அடைக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொது இடங்கள், சாலையோரங்களில் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் இருந்து வெளியூா் செல்லும் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளித்து, அதன் பிறகே பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், கரூா், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப்ா் பேருந்துகளுக்கு மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளித்தனா்.
அதன் பிறகு, முகக் கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். அரசின் உத்தரவுப்படி 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கப்பட்டன. பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...