காவல் நிலையத்தில் தகராறு செய்த தொழிலாளி மீது வழக்குப் பதிவு
காவல் நிலையத்தில் தகராறு செய்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


காவல் நிலையத்தில் தகராறு செய்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, சிங்காநல்லூா் காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் ஒருவா் வந்தாா். அவா் அங்கிருந்த போலீஸாரிடம் பகல் 12 மணியைக் கடந்த பின்னரும் ஒரு சில பேக்கரி கடைகள் இயங்கி வருகின்றன. அதன்மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனா். எனவே அந்தக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றாா்.
போலீஸாா் உறுதி அளித்த பின்னரும் அவா் அங்கிருந்து செல்லாமல் தகராறில் ஈடுபட்டாா். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா் அதே பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் (55) என்பதும், கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. காவல் நிலையத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...