ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை: அதிகளவில் மது அருந்திய மூவர் சாவு

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31) , சக்திவேல் (60) முருகானந்தம் (55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

News image
அதிகளவில் மது அருந்திய மூவர் சாவு
Updated On :4 நவம்பர் 2021, 11:37 am

DIN

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31) , சக்திவேல் (60) முருகானந்தம் (55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தென்காசியைச் சேர்ந்த முருகானந்தம் இப்பகுதியில் தங்கி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். நண்பர்களான மூவரும்  தீபாவளியைக் கொண்டாடுவதற்காக புதன்கிழமை மாலை மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழுபாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசிய்யம்மன் கோயில் எதிரே இருக்கும் , பாழடைந்த கட்டடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் சக்திவேல் தனது வீட்டுக்கு செல்ல கோயிலின் பின்புறம் வந்தவர் , கீழே உட்கார்ந்து இறந்துவிட்டார். இவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார். இருவரது உடல்களும் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில்  பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்துள்ளார்.

பின்னர் அவரது உடலும்  பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை எடுத்துச்சென்றனர். ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.