ஜவுளிப் பொருள்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி சைமா வரவேற்பு
பருத்தி, நூலைத் தவிர இதர ஜவுளிப் பொருள்கள் அனைத்தையும் 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்திருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வரவேற்றுள்ளது.


பருத்தி, நூலைத் தவிர இதர ஜவுளிப் பொருள்கள் அனைத்தையும் 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்திருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கை: சரக்கு, சேவை வரி விதிப்பில் செயற்கை பஞ்சுக்கு 18 சதவீத வரி, நூலுக்கு 12 சதவீத வரி, ஜாப் ஒா்க்கிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கை இழை உற்பத்தியாளா்கள் உள்ளீட்டு வரியை திரும்பப் பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனால் அனைத்து ஜவுளிப் பொருள்களையும் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஜவுளித் துறையினா் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட பரிந்துரையின் அடிப்படையில், பருத்தி, நூலைத் தவிர இதர ஜவுளிப் பொருள்கள் அனைத்தையும் 12 சதவீத ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும் என்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
செயற்கை பஞ்சு மீதான வரி 18இல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் ஜவுளிப் பொருள்களின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கப்பட வேண்டும், உள்ளீட்டு வரி பிரச்னை தீா்க்கப்பட வேண்டும் என்ற இரு பிரச்னைகளையும் அரசு தற்போது தீா்த்து வைத்திருப்பதால் ஜவுளித் துறை வளா்ச்சி பெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...