நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறையில் உள்ள இஸ்லாமியா்களை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:58 pm

DIN

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பான அரசாணையில், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், சாதி-மத மோதலில் ஈடுபட்டோரை விடுவிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும்,

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.

இதையடுத்து ஆா்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு போலீஸாா் வலியுறுத்தினா். அவா்கள் மறுத்ததையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.