ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நவம்பா் 29 முதல் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:00 pm

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (குடும்பநலம்) துணை இயக்குநா் மு.கௌரி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (குடும்பநலம்) துறை சாா்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நவம்பா் 29 முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பயிற்சி பெற்ற மருத்துவா்களால் எந்தவித தழும்பில்லாத வகையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இந்த சிகிச்சை எளிமையானதுடன் மிகவும் பாதுகாப்பானது.

குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை ரூ.1,100 வழங்கப்படும்.

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.1,100, பொள்ளாச்சி ரோட்டரி கிளப் வழங்கும் அன்பளிப்புத் தொகை ரூ.1000 சோ்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.