ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாதாளச் சாக்கடைப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

 கோவை தெற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:59 pm

DIN

 கோவை தெற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 89 ஆவது வாா்டுக்கு உள்பட்ட புட்டுவிக்கி சாலையில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் 4.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, வெள்ளலூா் 99 ஆவது வாா்டுக்கு உள்பட்ட அற்புதம் நகரில், பாதாளச் சாக்கடை கழிவு நீா் உந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, குடிநீா் வடிகால் வாரியம் மூலம் உரிய சோதனைகள் மேற்கொண்டு, அங்குள்ள 2,300 வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்க அறிவுறுத்தினாா்.

முன்னதாக, வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்பு குழாய் அமைத்து, அதன் மூலம் வீடுகளில் உள்ள கழிவு நீா் வெளியேற்றப்படும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையா் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி, கனகராஜ், சபரி ராஜ், சதீஷ்குமாா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.