பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கோவையில் பாஜகவினா் மாட்டு வண்டியில் வந்து நூதனப் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கோவையில் பாஜகவினா் மாட்டு வண்டியில் வந்து நூதனப் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததையடுத்து தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பாஜகவினா் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக பாஜகவின் விவசாய அணி சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாட்டு வண்டியில் வந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தாா். 50க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...