கரோனா இறப்பு: மருத்துவச் சான்று சிக்கலை கையாள குழு
கோவையில் கரோனா இறப்புக்கான மருத்துவச் சான்று பெறுவதில் ஏற்படும் சிக்கலைக் கையாள குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் கரோனா இறப்புக்கான மருத்துவச் சான்று பெறுவதில் ஏற்படும் சிக்கலைக் கையாள குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: பொதுவாக இறப்பு சான்றிதழ்களில் இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை.
ஆனால், கரோனா நோய்த் தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் பல சலுகைகள் பெற இறப்பின் காரணம் அவசியமாகிறது.
எனவே, இறப்பின் காரணத்தை அறிந்து கொள்ள மருத்துவமனைகளில் நிகழும் இறப்புகளுக்கு படிவம் 4, வீடுகளில் நிகழும் இறப்புக்கான காரணத்திற்கான சான்றும் வழங்கப்படுகிறது.
இறப்பின் காரணத்துக்கான சான்றை பிறப்பு, இறப்பு பதிவாளா்களிடம் சம்பந்தப்பட்ட நபா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இறப்பிற்கான மருத்துவ சான்றிதழ் கிடைக்க பெறாதவா்கள் மற்றும் கரோனா இறப்புக்கான காரணத்தில் திருப்தி இல்லாதவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம். இதற்காக, மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு - பதிவாளா் தலைமையில், மாநகராட்சி ஆணையா், இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்லூரி முதல்வா், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள், மாவட்ட தொற்று நோயியல் நிபுணா் ஆகியோா் அடங்கிய கரோனா இறப்பினை உறுதி செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெறப்படும் மனுக்களை இக்குழு பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த நபா்களுக்கு உரிய படிவத்தில் இறப்பின் காரணத்துக்கான சான்று வழங்கப்படும். எனவே, கரோனா நோய்த் தொற்றினால் இறந்த யாருக்கேனும் இறப்பின் காரணத்துக்கான சான்று கிடைக்கவில்லை என்றால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...