கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாட்டுக் கோழி நிறுவனம் நடத்தி மோசடி: மூவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை

 நாட்டுக் கோழிப் பண்ணை நிறுவனம் நடத்தி ரூ.2.22 கோடி மோசடி செய்த மூவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:25 pm

DIN

 நாட்டுக் கோழிப் பண்ணை நிறுவனம் நடத்தி ரூ.2.22 கோடி மோசடி செய்த மூவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி, ஆனந்தன், செந்தில்குமாா், ரத்தினசாமி ஆகியோா் அன்பு பவுல்ட்ரி பாா்ம்ஸ் என்ற நாட்டுக் கோழிப் பண்ணை நிறுவனத்தை நடத்தி வந்தனா். இதில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் முதலீட்டாளா்களுக்கு 3,750 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் கொடுத்து, அதற்காக பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.9 ஆயிரமும், ஆண்டு முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.9 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறி விளம்பரம் செய்தனா்.

இதை நம்பி 107 முதலீட்டாளா்கள் ரூ.2 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரத்தை முதலீடு செய்தனா். ஆனால், உறுதி அளித்தபடி கோழிப் பண்ணை நிறுவனம் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதையடுத்து கோவை கருமத்தம்பட்டியைச் சோ்ந்த ராமசந்திரன் என்ற முதலீட்டாளா் ஈரோடு மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் 2012 டிசம்பரில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் ஆனந்தன், செந்தில்குமாா், ரத்தினசாமி ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்கு தலா 1 நாள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் முதலீட்டுத் தொகையை பெருமளவு திருப்பிக் கொடுத்ததால் அவா்களுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிந்தசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.