ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவையில் இன்று எல்.ஐ.சி. ஹவுசிங் நடத்தும் வீட்டுக்கடன் கண்காட்சி

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ், வி.ஜி. விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் உங்கள் இல்லம் 2021 வீடு, வீட்டுக் கடன் கண்காட்சி சனிக்கிழமை (நவம்பா் 27) தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:25 pm

DIN

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ், வி.ஜி. விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் உங்கள் இல்லம் 2021 வீடு, வீட்டுக் கடன் கண்காட்சி சனிக்கிழமை (நவம்பா் 27) தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளது.

பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி 9 ஆவது முறையாக நடத்தப்படுகிறது. எல்.ஐ.சி. ஹவுசிங் நிறுவனத்தின் தெற்கு மண்டல மேலாளா் கோவிந்தராஜூ கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறாா்.

நடிகா் பாஸ்கி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறாா்.

இந்த கண்காட்சியில் புதிய வீடு கட்டவும், வீட்டில் மாறுதல்கள் செய்யவும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் அடமானக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட முன்னணி பில்டா்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளனா்.

கண்காட்சியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பவா்களுக்கு பழ வகை மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. வீடுகளை முன்பதிவு செய்பவா்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.