ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காவலா் பயிற்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:21 pm

DIN

கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் கடந்த சில நாள்களாக, கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது.

அதில் மறுமுனையில் பேசிய நபா், கோவை-அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து சிதறப் போகிறது, உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்களுடன் காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில் சோதனையிட்டனா்.

ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு வந்த கைப்பேசி எண்ணை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அதில், மிரட்டல் விடுத்தவா் புலியகுளத்தைச் சோ்ந்த மோகனகாந்தி (49) என்பதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.