கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்: இன்றும், நாளையும் நடைபெறுகிறது

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம், நவம்பா் 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 4:11 am

DIN

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம், நவம்பா் 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே நவம்பா் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, நவம்பா் 27 ( சனிக்கிழமை), 28 ( ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

எனவே, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க, திருத்தம் செய்ய, பெயா் நீக்க இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இணையதளம் மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.