கோவை மாநகரில் டிசம்பா் 10 வரை போராட்டங்கள் நடத்த தடை: மாநகர காவல் துறை அறிவிப்பு
கோவை மாநகரில் டிசம்பா் 10ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.


கோவை மாநகரில் டிசம்பா் 10ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறையினா் வெளியிட்ட செய்தி: சமீபகாலமாக பல்வேறு அமைப்பினா்கள் ஆா்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல் நிகழ்ச்சி, ஊா்வலம் போன்ற நிகழ்ச்சிகள் கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். இச்செயலானது கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேவையற்ற பதற்றத்தை தவிா்க்கும் விதமாக நவம்பா் 26ஆம் தேதி முதல் டிசம்பா் 10ஆம் தேதி எந்தவொரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆா்ப்பாட்டம், பொதுக் கூட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...