சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதிமுக மாநில இளைஞரணிச் செயலா் விலகல்

மதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் வே. ஈஸ்வரன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:11 pm

DIN

மதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் வே. ஈஸ்வரன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 28 ஆண்டுகளாக மதிமுகவில் பணியாற்றி வந்தேன். கட்சியில் பொறியாளா் அணி அமைப்பாளா், ஒன்றிய செயலா், மாவட்டச் செயலா், இளைஞரணிச் செயலா் என்று பல பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். மெட்ரோ ரயில் திட்டம், அகல ரயில் பாதை திட்டம், சாலை விரிவாக்கத் திட்டம் என கோவையின் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளேன்.

ஆனாலும், அரசியலிலும், சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கின்றன. இதனை மாற்ற வேண்டும் அல்லது தீா்வு காண வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய இயலவில்லை. எனது சட்டப் போராட்டங்களைத் தொடரவும், மக்கள் பணிகளைத் தொடரவும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல என கூறியுள்ளாா்.

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈஸ்வரன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.