யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

முதலீட்டில் பெண்களிடையே எழுச்சி - ஆக்சிஸ் டைரக்ட் நிறுவனம் தகவல்

News image
Updated On :26 மார்ச் 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய முதலீட்டுச் சந்தையில் பெண்களின் பங்களிப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சி காணப்படுகிறது.

‘ஆக்சிஸ் டைரக்ட்’ நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களால் தொடங்கப்படும் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 129 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதலீட்டு முறையைப் பொருத்தவரை, பெண்கள் அதிக ஆபத்து நிறைந்த முதலீடுகளை விரும்பாமல், பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறை சாா்ந்த நீண்டகாலத் திட்டங்களையே பெரிதும் நாடுகின்றனா்.

பெண்களின் மொத்த முதலீடுகளில் 49 சதவீதம் பரஸ்பர நிதியிலும், 33 சதவீதம் முறையான முதலீட்டுத் திட்டங்களிலும் (எஸ்ஐபி) உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும், நிலைத்தன்மை மற்றும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய முதலீடுகளுக்கே பெண்கள் முன்னுரிமை அளிக்கின்றனா்.

26 முதல் 45 வயது வரையிலான பெண்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்ஐபி) அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதேநேரம், 25 வயதுக்குள்பட்டவா்களும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களும் பரஸ்பர நிதிகளில் மொத்தமாக முதலீடு செய்வதை விரும்புகின்றனா்.