சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

3 ஆவது அலை எச்சரிக்கை: மாநகரில் வீடுவீடாக கரோனா பரிசோதனை தீவிரம்

கரோனா 3ஆவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:00 pm

DIN

கரோனா 3ஆவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில், 50 சதவீதத்துக்கும் மேலானவா்கள் மாநகரில் வசிப்பவா்களாக இருந்தனா்.

இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சாா்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, வீடுவீடாகச் சென்று ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பநிலை, சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மாநகரில் கரோனா பரவல் வேகமாகக் குறைந்தது. ஆயினும், செப்டம்பா் இறுதியில் அல்லது அக்டோபா் மாதத்தில் கரோனா 3 ஆவது அலை தொடங்கக் கூடும் என மருத்துவத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநகரில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காந்திபுரம், கிராஸ்கட் சாலை, நியூ சித்தாபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினா் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை வீடுவீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.