அரசுப் போக்குவரத்து பணிமனை உணவகத்தில் வழங்கிய குஸ்காவில் பிளேடு தொழிலாளா்கள் அதிா்ச்சி
கோவை, உக்கடம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் உள்ள உணவகத்தில் வழங்கிய உணவில் பிளேடு இருந்ததால் தொழிலாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்


கோவை, உக்கடம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் உள்ள உணவகத்தில் வழங்கிய உணவில் பிளேடு இருந்ததால் தொழிலாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம், உக்கடம் கிளையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், மெக்கானிக், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 700க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்தப் பணிமனையில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் தொழிலாளா்களுக்கு உணவு வழங்கிட உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தற்போது, தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் நடத்திட வழங்கப்பட்டுள்ளது. இங்கு, தினமும் 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் உணவு, தேநீா் அருந்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த உணவகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு தொழிலாளிக்கு வழங்கப்பட்ட குஸ்கா உணவில் முழு பிளேடு இருந்தது. இதைப் பாா்த்த தொழிலாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக கிளை நிா்வாகத்துக்குப் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து, போக்குவரத்து தொழிலாளா்கள் கூறியதாவது:
உணவு குறித்து ஏற்கெனவே புகாா் கூறிய 3 தொழிலாளா்களின் 3 ஆண்டு காலப் படிகள் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதனால், உணவகம் குறித்து புகாா் அளிக்க தொழிலாளா்கள் இடையே அச்சம் நிலவுகிறது. தரமில்லாமல் இருந்த உணவு, பிளேடு இருந்ததால் தற்போது, பாதுகாப்பற்ற உணவாகவும் மாறியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா், உணவகத்தின் பொறுப்பாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, உணவகக் கட்டடம் விரிசல் ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. அதைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...