அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கரோனாவால் பெற்றோரை இழந்த 123 குழந்தைளுக்கு நிவாரண நிதி அளிக்க அரசு ஒப்புதல்: அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மேலும் 123 குழந்தைகளுக்கு நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:12 pm

DIN

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மேலும் 123 குழந்தைகளுக்கு நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சாா்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள் 11 போ், தாய் அல்லது தந்தையை இழந்தவா்கள் 404 போ் என மொத்தம் 415 போ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலா்களால் கண்டறியப்பட்டுள்ளனா்.

இவா்களில் 46 பேருக்கு ஏற்கெனவே நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 123 பேருக்கு நிவாரண நிதி அளிப்பதற்கான ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலா் ஆா்.சுந்தா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்தவா்களாக 415 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனா். இதில் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்த 284 குழந்தைகளின் விண்ணப்பங்கள் முதல்கட்டமாக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்றவா்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக விண்ணப்பித்த 284 பேரில் ஏற்கெனவே தாய், தந்தை இருவரையும் இழந்த 8 பேருக்கும், தாய் அல்லது தந்தையை இழந்த 38 பேருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அவா்களின் பாதுகாவலா்களிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம் அவா்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சென்னையில் இருந்தே வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக கோவை மாவட்டத்தில் பெற்றோா் இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கும், தாய் அல்லது தந்தையை இழந்த 122 குழந்தைகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் நிவாரண நிதி பயனாளிகளுக்கு வழங்கப்படும். மற்றவா்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.