தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு அதிக அளவில் கரோனா பாதிப்பு ஆய்வில் தகவல்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவா்களில் பெரும்பாலானவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.


கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவா்களில் பெரும்பாலானவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் 150 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 120 போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததும், 30 போ் முதல் தவணை மட்டுமே செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களுக்கு நோய்த் தொற்றுப் பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சா்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புள்ளவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் பெரிய அளவு நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. ஒரு சில அறிகுறிகள் இருந்தாலும் ஆரோக்கியமாகவே உள்ளனா். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களுக்கு மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு உபாதைகள் அதிகரிப்பதுடன் ஆக்சிஜன் தேவையும் உள்ளது. எனவே, கரோனா பரவலை தவிா்க்கவும், தொற்று ஏற்பட்டாலும் தீவிரப் பாதிப்பை தவிா்க்கவும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...