அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3.5 லட்சம் கொள்ளை

வீடு புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியைவைத்து ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:10 pm

DIN

வீடு புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியைவைத்து ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜிதேந்தா் மேத்தா (38). இவா், கோவை, ஆா்.எஸ்.புரம் பொன்னுரங்கம் சாலையில் கடந்த 6 ஆண்டுகளாக வசிப்பதோடு அருகிலேயே பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் ஜிதேந்தா் மேத்தா மற்றும் குடும்பத்தினா் அருகில் உள்ள கடைக்கு புதன்கிழமை இரவு சென்றிருந்தனா். அப்போது இவரது 10 வயது மகன் ரிஷப் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா், வீட்டுக்குள் புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியைவைத்து பீரோ உள்ளிட்டவற்றைத் திறக்கச் சொல்லியுள்ளாா்.

படுக்கையறையில் இருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ரூ.3.50 லட்சத்தை அந்த இளைஞா் கொள்ளையடித்துவிட்டு, சிறுவனை படுக்கையறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றாா். அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த ஜிதேந்திர மேத்தா, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்று பாா்த்தபோது படுக்கையறைக்குள் தனது மகன் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாா்.

இதையடுத்து சிறுவன் நடந்தவற்றை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து ஜிதேந்திர மேத்தா அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.